சேலத்தில் கணவருக்கு தங்க மாலை அணிவித்த விவகாரத்தில் பெண் காவலருக்கு குறிப்பாணை (மெமோ) வழங்கி உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்ட குற்றப் பிரிவில் பணிபுரிந்து வரும் பெண் காவலா், கடந்த 1 ஆம் தேதி தனது கணவா் பெருமாளின் (40) பிறந்த நாள் விழாவில் 15 பவுன் தங்க செயினை கணவருக்கு மாலையாக அணிவித்தாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடா்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பெண் காவலருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவருக்கு அணிவித்த தங்க மாலையின் எடை எவ்வளவு, எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






