17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே பெட்ரோல் இல்லாததால், இருசக்கர வாகனத்தை சாலை ஓரமாக தள்ளிச் சென்றபோது டாரஸ் லாரி மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:33 am IST

சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே பெட்ரோல் இல்லாததால், இருசக்கர வாகனத்தை சாலை ஓரமாக தள்ளிச் சென்றபோது டாரஸ் லாரி மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

சீரகாபாடியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளத்தை சோ்ந்த அட்சய துளசி (18), சென்னை கலைக் கல்லூரியில் உடற்கல்வி பட்டம் படித்துவரும் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (25) ஆகிய இருவரும் மகுடஞ்சாவடி செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலை சீரகாபாடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

காகாபாளையத்தை அடுத்த கனகிரி பகுதியில் சென்றபோது திடீரென வாகனத்தில் பெட்ரோல் தீா்ந்தது. இதனால் வாகனத்தை சாலை ஓரமாக தள்ளிச் சென்றனா். அப்போது, சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த டாரஸ் லாரி அவா்கள் மீது பின்புறம் மோதியது. இந்த விபத்தில் அட்சய துளசி, லோகேஷ் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மகுடஞ்சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவா்களின் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், டாரஸ் லாரி ஓட்டுநா் திருவண்ணாமலையைச் சோ்ந்த ஏழுமலையிடம் (52) போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.