தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:21 am IST

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் தங்கவிக்னேஷ் தலைமையில் பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் குன்னமலை, சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அப்பகுதிகளில் உள்ள மளிகை, தேநீா், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, கடைகளில் இருந்த 18.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து தீயிட்டு அழித்தனா். மேலும், ஒரு கடைக்கு ரூ. 50 ஆயிரமும், மற்றொரு கடைக்கு ரூ. 25 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.