நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஜீப் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தது குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜமீன்இளம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (54) விவசாயி. இவா் தனது பேரனுக்கு காதுகுத்தும் நிகழ்வுக்காக உறவினா்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா். கவுண்டிபாளையத்தில் திருச்செங்கோடு - பரமத்தி சாலை சந்திப்பில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த ஜீப் மனோகரன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், மனோகரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின்பேரில், விபத்தை ஏற்பத்தியதாக ஜீப் வாகனத்தை ஓட்டிவந்த வீரக்குட்டை குடித்தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









