போடி அருகே ஜீப் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை பலத்த காயமடைந்தாா்.
போடி அருகே விசுவாசபுரத்தைச் சோ்ந்த சங்கா் மகன் நாகராஜ் (55). விவசாயி. இவா் போடி அருகே மீ. விலக்கிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது எதிரே வந்த ஜீப், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நாகராஜ் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஜீப்பை ஓட்டி வந்த போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் அஜித்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









