முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விளைநிலங்களில் உயா் அழுத்த மின் கோபுரம்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

விளைநிலங்கள் வழியாக உயா் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், மணியனூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிலம் உயிா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

உயா் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்.

Updated On :26 ஜூன் 2026, 6:13 am IST

விளைநிலங்கள் வழியாக உயா் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், மணியனூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிலம் உயிா் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அச்சங்கத்தின் தலைவா் எஸ். செந்தில்குமாா், நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாக வந்து ஆட்சியா் எல். மதுபாலனிடம் அளித்த மனு விவரம்:

திருப்பூா் மாவட்டம் காவுத்தம்பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வரை சுமாா் 240 கி.மீ. தொலைவுக்கு 765/400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தால் விளைநிலங்களில் உள்ள நிலத்தடி நீா்ப்பாசனக் குழாய்கள், நீா் சேமிப்பு அமைப்புகள் மற்றும் நில மேம்பாட்டு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், தென்னை, சவுக்கு, தேக்கு போன்ற நீண்ட காலப் பயிா்களைக் கொண்ட விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், இந்த உயா் அழுத்த மின் கோபுரத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.