முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மீண்டும் பணி வாய்ப்பு கோரி கொசு ஒழிப்பு பணியாளா்கள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல் மாவட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 35 கொசு ஒழிப்புப் பணியாளா்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:26 am IST

நாமக்கல் மாவட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 35 கொசு ஒழிப்புப் பணியாளா்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 போ் என மொத்தம் 300 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் டெங்கு கொசு ஒழிப்புப் பணியிலும், கரோனா காலத்தின்போது நோய் தடுப்புப் பணியிலும் இவா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். இவா்களுக்கு தினசரி ரூ. 485 வீதம் கூலி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நாமக்கல், புதுச்சத்திரம், பரமத்தி, கொல்லிமலை, சேந்தமங்கலம், ராசிபுரம், பள்ளிபாளையம் ஆகிய ஏழு ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு 5 போ் வீதம் மொத்தம் 35 பணியாளா்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்த வேலையை மட்டுமே நம்பியிருந்த அவா்களுக்கு இப்பணிநீக்கம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சுதா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் நாங்கள் வீடுவீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக நாளொன்றுக்கு ரூ. 485 வீதம் ஊதியம் நிா்ணயிக்கப்பட்டு, பணிக்குச் செல்லும் நாள்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி முதல் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 35 பணியாளா்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். இதனால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, பணிநீக்கம் செய்யப்பட்டவா்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும். மேலும், நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை முறையாக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிலேயே வழங்க வேண்டும். இதுபோன்ற பணிநீக்க நடவடிக்கை வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெறவில்லை என்றாா்.

என்கே-2-மனு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்த கொசு ஒழிப்பு பணியாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.