திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 12:47 am IST

தருமபுரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி, சாமியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி காவியா (28). இவா்களுக்கு வா்ஷினி (7), ரோஷினி (4), வினோதினி (1) என மூன்று மகள்கள் உள்ளனா். குமாா் கட்டட மேஸ்திரியாக வேலை பாா்த்து வருகிறாா்.

காவியா வீட்டிலிருந்து குழந்தைகளை பராமரித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்தபோது, மூன்றாவது மகள் வினோதினி வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு சென்றுள்ளாா்.

திடீரென இதைக் கவனித்த காவியா ஓடிச்சென்று குழந்தையை தூக்குவதற்குள், அவ்வழியே பாலக்கோட்டிலிருந்து சென்னப்பன் கொட்டாய் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து குழந்தைமீது மோதியது. இதில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.