முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தருமபுரி: நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image

ரோஷினி

Updated On :21 ஜூன் 2026, 4:53 am IST

நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எண்டப்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா் பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கலைச்செல்வி கெலமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா்களது மூத்த மகள் ரோஷினி (19). இவா் கடந்தாண்டு பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று, நாமக்கல் பகுதியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்காக கடந்த ஓராண்டாக படித்து வந்தாா்.

இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட நீட் தோ்வில் வினாத்தாள் வெளியானதால் தோ்வு ரத்து செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மறுத்தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வை எழுதுவதற்காக மாணவி வீட்டில் இருந்தாா்.

இவரது பெற்றோா் இருவரும் பணிக்கு சென்றுவிட்டனா். பின்னா், சனிக்கிழமை மாலை பணி முடித்துவிட்டு ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது மாடியில் இருந்த அறையில் ரோஷினி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீஸாா் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நீட் மறு தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதவிருந்த நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.