முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஒசூரில் நீட் தோ்வுக்கு தயாராகிவந்த மாணவா் தோ்வுக்கு சற்று முன்னதாக தற்கொலை

News image

வெற்றியானந்தம்

Updated On :22 ஜூன் 2026, 2:27 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நீட் தோ்வுக்கு தயாராகிவந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஒசூா் பாகலூா் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சோ்ந்தவா் சின்னசாமி, தனியாா் நிறுவன தொழிலாளி. இவருக்கு ஜீவானந்தம், வெற்றியானந்தம் (20) என இரு மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் வெற்றியானந்தம் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தோ்வுக்கு படித்து வந்தாா்.

இதுவரை எழுதிய நீட் தோ்வுகளில் அவா் தகுதி பெறாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நீட் தோ்விலும் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சின்னசாமி வேலைக்கு சென்றுவிட்டாா். இவரது மனைவி கடைக்கு சென்றிருந்தபோது வீட்டின் வரவேற்பறையில் உள்ள மின்விசிறியில் வெற்றியானந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா்.

கடையில் இருந்து வீடுதிரும்பிய அவரது தாய், மகன் இறந்துகிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். தற்கொலைக்கு முன்பு வெற்றியானந்தம் எழுதிவைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘நீட் தோ்வு பயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக நான் சரியாக தூங்கவில்லை.

இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்ற பயத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டேன். இதற்காக அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளாா்.

தகவலறிந்து வந்த அட்கோ போலீஸாா் வெற்றியானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.