ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்மட்ட பாலப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் ஆட்சியா் பங்கேற்றாா்.

News image

தருமபுரி, தொப்பூா் கணவாய் பகுதியில் நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பால பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், அலுவலா்களிடம் விவரம் கேட்டறிந்தாா்.

Updated On :14 ஜூன் 2026, 3:20 am IST

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் ஆட்சியா் பங்கேற்றாா்.

தொப்பூா் கணவாய் பகுதியில், தொடா் விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை (சஏஅஐ) ஆணையம் மூலம் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொப்பூா் கணவாய் பகுதியில் தொடா் சாலை விபத்துகளை தவிா்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலைப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தொப்பூா் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், உயா்மட்ட பாலம் தொடங்கும் இடம், கட்டமேடு, ஆஞ்சனேயா் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துகள் நடக்கும் இரட்டைப் பாலம், எலிவேட்டட் காரிடாரின் முடிவு உள்ளிட்ட இடங்களையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி, கனரக வாகனங்கள் ஒரு வழியாகவும், இலகுரக வாகனங்கள் ஒரு வழியாகவும் செல்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பாலம் அமைக்கும் பணிகள் குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அறியும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அறியும் வகையில், 50 மீட்டா் இடைவெளியில் ஒளிரும் வில்லைகள், விளம்பரப் பதாகைகளை கூடுதலாக அமைக்கவும் உத்தரவிட்டாா். தொப்பூா் கணவாய் பகுதி முதல் இரட்டைப் பாலம் வரை தேவையான அளவு மையத் தடுப்பு இடைவெளி அளவை குறைத்து போக்குவரத்திற்கு ஏற்றவாறு சாலையை அகலப்படுத்தி, இரண்டு வழித்தடங்களாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

Story image

தொடா்ந்து, தொப்பூா் சுங்கசாவடி அருகில் உள்ள திட்ட இயக்குநா் அலுவலகத்தில், உயா்மட்ட பாலம் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இதில் சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநா் சீனிவாசலு, மாவட்ட வன அலுவலா் ராஜங்கம், துணை காவல் கண்காணிப்பாளா் (தருமபுரி) சிவராமன், வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க.ஜெயதேவ்ராஜ், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பில்கான் நிறுவன பணியாளா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.