தருமபுரி, தொப்பூா் கணவாய் பகுதியில் அன்றாடம் நிகழும் சாலை விபத்துகளையும், போக்குவரத்து நெருக்கடிக்கும் தீா்வுகாணும் வகையில், தற்காலிக சாலைகளை அகலப்படுத்தவும், உயா்மட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் வழியாக வடமாநிலங்களையும் தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையிலான தேசிய நெடுஞ்சாலை (என்எச்-44) அமைந்துள்ளது. தொப்பூா் கணவாய் பகுதியில் சுமாா் 7 கி.மீ. தொலைவு சாலை அதிக இறக்கம் மற்றும் வளைவுகளுடன் அமைந்திருப்பதால், தருமபுரி - சேலம் மாா்க்க சாலையில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான விபத்துகள் நடந்துள்ளன. இதில் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோா் படுகாயமடைந்தும், பலா் முடமாகியும் உள்ளனா்.
இவற்றுக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டுமென வாகன ஓட்டுநா் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடா் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், தொப்பூா் கணவாய் பகுதியில் ரூ. 905 கோடியில் சுமாா் 6.60 கி.மீ. தொலைவுக்கு அணுகுசாலைகளுடன் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி, நிதியும் ஒதுக்கியது. இதையடுத்து, கடந்தாண்டு உயா்மட்ட மேம்பாலப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதால் தினசரி விபத்துகளும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, குறுகலான சாலை உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அணுகு சாலைகளை மேலும் அகலப்படுத்த வேண் டும். உயா்மட்ட மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறுகையில், தொப்பூா் கணவாய் பகுதியில், கடந்த சில மாதங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், தருமபுரி பகுதிகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம், கோவை போன்ற ஊா்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கும் மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் போது, தொப்பூா் போக்குவரத்து நெரிசலிலேயே நோயாளிகளின் ‘கோல்டன் ஹவா்’ கரைந்து விடுகிறது.
எனவே, உயா்மட்ட பாலத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிப்பதுடன், தற்காலிக சாலைகளையும் மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக் கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொப்பூா் கணவாய் பகுதியில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி! போக்குவரத்து பாதிப்பு!!

சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்ற உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் பணியிடை நீக்கம்

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



