குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்ற உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் பணியிடை நீக்கம்

தொப்பூா் கணவாய் பகுதியில் சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்றதாக உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 மே 2026, 2:29 am IST

தொப்பூா் கணவாய் பகுதியில் சரக்கு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்றதாக உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் விதிகளை மீறி சுமைகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் பணத்தை பெற்றுக்கொண்டு வாகனங்களை இயக்க அனுமதிப்பதாக தகவல் பரவியது. இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டாா். அதில், வாகன சோதனையின்போது போலீஸாா் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது உறுதியானது.

இதையடுத்து, முறைகேடுகளில் ஈடுபட்ட தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபதி (50), தலைமைக் காவலா்கள் வெங்கடேசன் (31), பரதன் (35) ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.