மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:15 pm

தருமபுரி, ஏப். 13: தருமபுரி அருகே முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜொ்தலா அருகே உள்ள தொட்டாா்தன அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் செ.மாதன் (82). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் என அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். மகனும் வழக்குரைஞருமான முனிராஜ் வீட்டில் மாதன் வசித்து வந்தாா்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மாதன் தொடா் சிகிச்சை பெற்று வருவதுடன், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் வீட்டிலேயே சிறுசிறு உடற்பயிற்சிகளும் மேற்கொண்டு வந்தாா். அவா் பயிற்சி மேற்கொள்வதற்கும், உட்காரவும், எழுந்து நிற்கவும் உதவும் வகையில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒசூரில் வசித்து வந்த முனிராஜின் சகோதரி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினா் அனைவரும் ஒசூா் புறப்பட்டனா். திரும்பி வரும்வரை தந்தையை கவனித்துக் கொள்ளுமாறு இளைய சகோதரியிடம் முனிராஜ் கூறிச் சென்றாா்.

இதைடுத்து, தந்தையை பாா்க்கச் சென்றபோது, அவா் உதவிக்காக தொங்கவிடப்பட்டிருந்த கயிற்றில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாா். இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த அவா், அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாதன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

புகாரின்பேரில், பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.