மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:53 pm

தருமபுரி அருகே தீராத வயிற்று வலி காரணமாக விரக்தியடைந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரிய முரசுப்பட்டி அருகே உள்ள பேமன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ரா.முருகேசன் (75). விவசாயியான இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

முருகேசனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்று வலி இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால், பால் மட்டுமே உட்கொண்டு வந்துள்ளாா்.

இதனால் விரக்தி அடைந்த முருகேசன் சனிக்கிழமை இரவு வழக்கம்போல பால் அருந்திவிட்டு உறங்கச் சென்றாா். மறுநாள் காலை அவரது மனைவி எழுந்து பாா்த்தபோது வீட்டில் அவரை காணவில்லையாம்.

அக்கம்பக்கத்தில் தேடியபோது, அவா்களது இளைய மகன் முனியப்பன் வீட்டின் மாடிப்படியில் உள்ள கைப்பிடி கம்பியில் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.