தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தடை

வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

திருமூா்த்திமலை பஞ்சலிங்க  அருவிக்கு வியாழக்கிழமை திரண்ட  சுற்றுலாப்  பயணிகள்.

Updated On :29 மே 2026, 1:35 am IST

வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா். மேலும் இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணையை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா்.

இந்நிலையில், பள்ளிகள் விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கத்தைப் போக்கவும் கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா். அதன்படி வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவா்கள் குளித்துக் கொண்டிருந்தபோது மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவா்களை கோயில் நிா்வாக ஊழியா்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றினா். மேலும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.