திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருமுருகன்பூண்டியில் மதுக் கடையை அகற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:55 am IST

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக திருமுருகன்பூண்டி நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு சுமாா் 500 மீட்டா் தொலைவில் உள்ள 717 மதுக் கடைகள் மூட முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், திருமுருகன்பூண்டியில் ஆரம்பப் பள்ளி, வங்கி, கருப்பராயன், நாகாத்தம்மன் கோயில்களுக்கு அருகே அரசு மதுக் கடை (எண் - 1513) செயல்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, அந்தக் கடையை அகற்றி மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.