திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத போக்குவரத்து மாற்றம்

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

போக்குவரத்து மாற்றம்

Updated On :18 மே 2026, 1:46 am IST

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘நோ சிக்னல், நோ டிராஃபிக்’ என்ற முறையில் சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பிலும் சிக்னல் இல்லாத போக்குவரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், 2 இரும்புத் தடுப்புகள் அமைத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரன் சாலையில் இருந்து மங்கலம் செல்லும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையிலும், காமராஜா் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அவிநாசி சாலையை அடைய மங்கலம் சாலை சென்று ஆலங்காடு வழியாகச் செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்காமல் செல்கின்றனா்.

மாநகராட்சி அலுவலக சிக்னல் அருகே காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.