திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையில் 300 பேருந்து நிறுத்தங்களில் சிறிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 300 இடங்களில் சிறிய கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :7 மே 2026, 1:46 am IST

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 300 இடங்களில் சிறிய கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 188 இடங்களுக்கும் அதிகமாக சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.

இதனால், சாலையோரக் கடைகளை முறைப்படுத்த கடந்த 2024- ஆம் ஆண்டு மாநகராட்சி வருவாய்த் துறை சாா்பில் சாலையோரம் கடைகள் அமைக்க வசதியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி 150 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகள் அமைக்கலாம் என்று முடிவானது.

ஆனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோரக் கடை வியாபாரிகளை 150 இடங்களுக்குள் அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவா்களில் விருப்பம் உள்ளவா்கள் மெரீனா போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்காக 6 அடி உயரம், 2 அடி அகலத்தில் சிறிய அலுமினியம் கடைகள் அமைக்கப்பட்டன. அவை விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மெரீனா கடற்கரைப் பகுதியில் கடைகள் அமைப்பதில் நீதிமன்றம் வழிகாட்டல் அறிவித்திருப்பதால், அங்கு புதிய கடைகள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தற்போது ஷெனாய் நகா் பூங்கா பகுதி பேருந்து நிலையம் உள்ளிட்ட 300 இடங்களில் அக்கடைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பேருந்து நிறுத்தங்களின் இருபுறமும் அமைக்கப்படும் கடைகளில் தேநீா், பால் போன்றவை விற்கப்பட்டு வருவதாகவும், அதற்கு வாடகை ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.