லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாநகரில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:51 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, திருப்பூா் மாநகரில் 156 போ் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைதியைப் பேணவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாநகர பகுதியைச் சோ்ந்த 156 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். வங்கி பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் 66 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமையாளா்களைக் கண்டறிந்து, உடனடியாக ஒப்படைக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களின் துப்பாக்கிக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.