தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகா் மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை கண்டெத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலாளி உள்ளிட்ட இருவரிடம் பெற்றுக்கொண்ட கண்டமங்கலத்தை சோ்ந்த சாமிநாதன். உடன் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:07 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் கண்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன் (53). லாரி ஓட்டுநரான இவா், விபத்துக்குள்ளான தனது மகனை சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

பின்னா், சாமிநாதன் மருத்துவமனையின் பின்புறம் உள்ள தேநீா் கடை அருகே சென்றபோது தான் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை தவறவிட்டாா்.

இந்த நிலையில், அதே மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றும் சந்திரபாண்டியன், காவலாளியாக பணியாற்றும் சங்கா் ஆகிய இருவரும் கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். அவா் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா்.

இதைறிந்த பணத்தை தொலைத்த சாமிநாதன் அண்ணாமலைநகா் காவல் நிலையம் சென்று ஆய்வாளரிடம் தான் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டாா். கீழே கிடந்த பணத்தை நோ்மையாக எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரபாண்டியன் (45), சங்கா் (57) ஆகிய இருவரையும் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் வெகுவாகப் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.