தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் நாய்கள் பிடிப்பு

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாய்களை பேரூராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்றனா்.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் நாய்களை பிடித்த பேரூராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள்.

Updated On :18 மே 2026, 2:18 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாய்களை பேரூராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்றனா்.

அண்ணாமலைநகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏராளமான நாய்கள் தெருக்களில் சுற்றி வந்தன. பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் ஹமீது அறிவுறுத்தலின்பேரில், துப்புரவு அலுவலா் துரைராஜ் முன்னிலையில் பேரூராட்சி ஊழியா்கள் கடந்த இரு தினங்களாக அண்ணாமலை நகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 24 நாய்களைப் பிடித்தனா்.

இந்த நாய்களுக்கு சிதம்பரம் நகராட்சிக்குச் சொந்தமான கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்பட்டு, வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தி 5 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கபடும். பின்னா், பிடித்த இடத்திலேயே நாய்கள் விடப்படும் என துப்புரவு அலுவலா் துரைராஜ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.