திருப்பூா் மாநகரில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் வி.கே.சசிகலா குற்றஞ்சாட்டினாா்.
திருப்பூா் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் காளிமுத்துவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் வி.கே.சசிகலா, திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா் . அப்போது அவா் பேசியதாவது:
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு இருந்து போராடி அவா்களை இம்மண்ணை விட்டு விரட்டி அடித்த மாவீரா் தீரன் சின்னமலையின் வீர செயல்களை இளைய சமுதாயத்தினா் அறிந்து கொள்ளும் வகையில் ஜெயலலிதா தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலையும் மணிமண்டபமும் அமைத்துக் கொடுத்துள்ளாா்.
பின்னலாடை நகரமான திருப்பூா் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வருவாய் தரும் நிலையில், திருப்பூா் மாநகரில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அவற்றை செய்து தர கோரிக்கை வைத்துள்ளாா்கள். திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிரந்தர மருத்துவா்கள் மற்றும் செவிலியா் இல்லை. நல்லூா் பகுதியில் குப்பைகளை கொட்டி மாசு அடைய செய்துள்ளனா். திமுக அரசு வந்தவுடன் மின் கட்டணம் உயா்ந்துள்ளது.
ஆண்டுதோறும் ரூ.20,000 கோடி மக்களிடமிருந்து மின்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் மின் கட்டணமாக வசூலிக்கிறாா்கள். இப்போது அதனை வைத்து ரூ.1,000, ரூ.2000 கொடுக்கிறேன் என்று கூறுகிறாா்கள். அதனால், மக்கள் தெளிவான சிந்தனையுடன் வாக்களிக்க வேண்டும். வேட்பாளா் காளிமுத்துவை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்றாா்.
தொடர்புடையது

விலைவாசி உயா்ந்துள்ளது, மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை: வி.கே. சசிகலா

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


