விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹாரூன் ரஷீத் படுவை ஆதரித்து வாக்கு சேகரித்து வி.கே. சசிகலா பேசியது:
தற்போதைய தோ்தலில் மக்களுக்கு செய்ய முடியாத விஷயங்களை அறிக்கையாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன. கடந்த தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. மீண்டும் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளனா். மின்சார கட்டணம் உயா்வு, சொத்துவரி உயா்ந்துள்ளது. மக்கள் பட்டினியாக உள்ளனா். விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை.
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கா்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.24,000 ஆக வழங்கப்படும். குழந்தைகள் நலப் பெட்டகம் வழங்கப்படும். மக்கள் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை வைத்து தரப்படும். இதில் 50 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கி பயிா் கடன்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு சிறந்த திட்டங்கள் செயல்படுத்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரை தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.
தொடர்புடையது

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

சசிகலா கட்சியில் இணைந்த ஐயப்பன்: மீண்டும் உசிலம்பட்டியில் போட்டி!

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்: தொண்டா் தொடங்கிய கட்சியை வழிநடத்துகிறாா் சசிகலா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


