மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சசிகலா கட்சியில் இணைந்த ஐயப்பன்: மீண்டும் உசிலம்பட்டியில் போட்டி!

சசிகலா கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன் குறித்து...

News image

ராமதாஸ், சசிகலா கூட்டணி - படம்: ANI

Updated On :1 ஏப்ரல் 2026, 10:36 am

உசிலம்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து அண்மையில் ராஜிநாமா செய்த ஐயப்பன், மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார்.

சசிகலா முன்னிலையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஐயப்பன் இன்று(ஏப். 1) இணைந்தார்.

சசிகலா முன்னிலையில் அஇபுதமமு கழகத்தில் ஐயப்பன் இன்று இணைந்த நிலையில், உசிலம்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவர் வி.கே. சசிகலா இன்று வெளியிட்டார்.

அதில், உசிலம்பட்டி, அரவக்குறிச்சி, ஆம்பூர், அம்பாசமுத்திரம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகி அதிமுக உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கியபோது அவருடன் தொடர்ந்து பயணித்தவர் ஐயப்பன். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தபோது அவருடன் சேர்ந்து இணைந்தார். மேலும், இவர்கள் இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தனர்.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டபோதிலும், ஐயப்பனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், ஐயப்பன் பெரும் வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மதுரை அருகே செக்கானூரணியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஐயப்பன், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்துள்ளார்.

Summary

Ayyappan, who recently resigned as the MLA for the Usilampatti constituency, is once again contesting in the same constituency on behalf of Sasikala's All India Puratchi Thalaivar Makkal Munnetra Kazhagam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.