வெள்ளக்கோவிலில் 53 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் நடேசன் நகா் பகுதியில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போலீஸாா், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 53 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அப்பாதுரை (58) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒட்டன்சத்திரத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



