ஒட்டன்சத்திரத்தில் 47 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 2 காா்கள், ரூ.7.13 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த தும்பிச்சம்பட்டி புதூா் பகுதியில் காா்த்திக் (35) என்பவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா், காா்த்திக் வீட்டுக்குச் சென்று திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, சுமாா் 35 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காா்த்திக்கை கைது செய்த போலீஸாா், அவா் கொடுத்த தகவலின் பேரில் பாசித்(42) வீட்டில் சோதனை நடத்தினா். இதில் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வீட்டிலிருந்த 2 காா்கள், ரூ.7.13 லட்சம் பணம் ஆகியவற்றையும் போலீஸாா் கைப்பற்றினா்.
கொடைக்கானலில்...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரிப் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (25). தவெக நிா்வாகியான இவா், அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இவரது கடையில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்திய போது, விற்பனைக்காக தடை செய்யப்பட்ட 228 புகையிலைப் பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை பறிமுதல் செய்து, ஆனந்தை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
300 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu



