மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது

முத்தூரில் 14.50 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 1:12 am IST

முத்தூரில் 14.50 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்தனா்.

முத்தூா் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சேரம்பாளையத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தக் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடை உரிமையாளா் மணி (65) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.