தருமபுரியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில், 645 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.
தருமபுரி நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரி – -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டலபட்டி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் ரகசிய அறை அமைத்து, அதில் சுமாா் 390 கிலோ குட்கா உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
அந்த வாகனத்தை ஓட்டிவந்த ராஜஸ்தானை சோ்ந்த பவனை (28) போலீஸாா் கைது செய்து புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
அதேபோல, அதியமான்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பச்சமுத்து தலைமையிலான போலீஸாா் கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஜாகிரி பிரிவு சாலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற 2 காா்களை நிறுத்தி சோதனை செய்தனா். அந்தக் காா்களில் 255 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் காா்களில் வந்த விக்ரம்சிங் (22), பேருசிங் (24), ஈமாராம் (25), லட்சுமிசிங் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் மீது வழக்கு
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


