அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

1.750 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இரண்டு இளைஞா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 12:26 am IST

வெள்ளகோவிலில் 1.750 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இரண்டு இளைஞா்களைக் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள நூற்பாலைகளில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தொழிலாளா்கள் புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட போதைப் பொருள்களை வைத்துள்ளனரா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரட்டுப்பாளையம் அருகேயுள்ள நூற்பாலையில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தங்கி பணியாற்றி வரும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நாராயணன் முஜி (31) என்பவரிடமிருந்து 750 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, மோளக்கவுண்டன்வலசு பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முக்தாா் (33) என்பவரிடம் இருந்து ஒரு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.