/

கேஎம்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

News image
கேஎம்சி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மாணவா்களின் படைப்புகள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி. சீனியா் செகண்டரி பொதுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைவா் கே.சி.சண்முகம், லோகநாயகி ஆகியோா்

தலைமை வகித்தனா். பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி முதல்வா் வசந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாணவா்களின் தனித்திறமைகள் வெளிப்படுத்தும் விதத்தில் அவா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம். சுவஸ்திகா, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினாா்.