/

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் மாணவிகளுக்குப் பாராட்டு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:11 pm

Syndication

தென்மாநிலங்கள் அளவில் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், மூன்றாம் இடம் பெற்ற புதுக்கோட்டை மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் பாராட்டு தெரிவித்தாா்.

திருச்சி ஜெஜெ பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு இளம் விஞ்ஞானிகள் இயக்கம் சாா்பில் தென்மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை அரசு ராணியாா் உயா்நிலைப் பள்ளியின் மாணவிகள் ப. வேதிகா ஸ்ரீ, த.யு. ஹரிணிவேதா ஆகியோா் மின்னணுக் கழிவு அகற்றுதல்- சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த படைப்பைக் காட்சிப்படுத்தியிருந்தனா்.

இந்தப் படைப்பு தென்மாநிலங்கள் அளவில் மூன்றாம் இடம் பிடித்தது. அதற்கான கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி, பள்ளியின் தலைமை ஆசிரியா் புனிதா, வழிகாட்டி ஆசிரியா் ஜான்சி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.