டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆம்பூா் ஹஸ்னாத்-யே-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

News image
மாணவருக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ் வழங்கிய நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் ஹஸ்னாத்-யே-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவுக்கு பள்ளியின் தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத் தலைமை வகித்தாா். ஆம்பூா் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் தலைவா் அஷ்பாக் அஹமத் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். பள்ளிக் குழு உறுப்பினா்கள் யு.தமீம் அஹமத், சி.முஸாபா் பாஷா, கே.கம்ரான் பாஷா, ஆயிஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்காட்சியில் சுமாா் 430 மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

நிறைவு விழாவில் அம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவா்களை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் சயீத் முஜீப், ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் பாதேகான் தாஹா முஹம்மத், ஹஸ்னாத்-யே-ஜாரியா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஷகீலா பானு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பள்ளித் தலைமையாசிரியை ரேஷ்மா நன்றி கூறினாா்.