/

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் சிறையில் அடைப்பு

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
சிறை
Updated On :3 பிப்ரவரி 2026, 8:25 pm

Syndication

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் மாநகா், வடக்கு காவல் நிலையத்தில் சந்துரு (38) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை போலீஸாா் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.