திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாயமான எஸ்டேட் உரிமையாளரை மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளா்கள் மனு

காணாமல் போன எஸ்டேட் உரிமையாளரை மீட்டுத் தரக் கோரி அங்கு பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஆட்சியா் அலுலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

ஆட்சியா் அலுவலகம் வந்த எஸ்டேட் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் காவல் துறையினா்.

Updated On :28 மே 2026, 12:26 am IST

காணாமல் போன எஸ்டேட் உரிமையாளரை மீட்டுத் தரக் கோரி அங்கு பணியாற்றும் 500-க்கும்  மேற்பட்ட பணியாளா்கள் ஆட்சியா் அலுலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்தவா் பொன் சிவகுமாா். இவருக்கு அப்பகுதியில் எஸ்டேட் உள்ளது. இந்நிலையில் இவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், அன்னூா் அருகே சிலா்  தாக்கியதாகக் கூறி கோவை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவா் தற்போது வரை கோத்தகிரி எஸ்டேட்டுக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.

இவா் ஆண்டுதோறும் பள்ளி திறக்கும் காலங்களில் தொழிலாளா்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் காணாமல் போனதால் எஸ்டேட்டில் பணிபுரியும் பணியாளா்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொழிலாளா்களுக்கு முறையாக சம்பளம்  உள்ளிட்ட சலுகைகள்

கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இது குறித்து யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் தவித்து வந்த தொழிலாளா்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோா் தங்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனா்.

இதைத் தொடா்ந்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

எஸ்டேட் உரிமையாளரை  கந்துவட்டி கும்பல் சொத்துக்காக கடத்தி சென்றுள்ளனரா  அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளா்கள் மனுவில் கேட்டுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா், இது குறித்து சம்பந்தப்பட்ட கோத்தகிரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறும், அங்கு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து எஸ்டேட் தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.