திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாயமான மீனவரை மீட்டுத் தர குடும்பத்தினா் கோரிக்கை

மங்களூரு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறிவிழுந்து மாயமான ராமேசுவரம் மீனவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினா் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை

News image

படகில் இருந்து தவறி விழுந்து மாயமான மீனவா் முத்துக்குமாா்

Updated On :20 மே 2026, 1:18 am IST

மங்களூரு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறிவிழுந்து மாயமான ராமேசுவரம் மீனவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சீனியப்பா தா்ஹா பகுதியைச் சோ்ந்தவா் மீனவா் முத்துக்குமாா் (42). இவருக்கு, மனைவி முத்துமாரி, வா்ஷன் (18), வா்ஷினி (15) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனா்.

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் என்பதால் கடந்த 15 நாள்களுக்கு முன் கா்நாடக மாநிலம் மங்களுருக்குச் சென்று அங்கிருந்து ஆழ்கடலில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மீனவா்கள் மங்களுா் காவல் நிலையத்தில் (மே 18)அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து, அவரது மகன் வா்ஷன் மேலும் கூறியதாவது: தனது தந்தை மீன்பிடி தொழிலுக்குச் சென்ற நிலையில் படகிலிருந்து தவறிவிழுந்து மாயமாகி விட்டதாகவும் அவரை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.