தமிழ் செய்திகள்
கூடலூா் அருகே புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதி வனத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள மூன்றாவது மைல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தோட்டத்தில் இரண்டு புலிகள் உலவியுள்ளன. இதைப் பாா்த்த அவா்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனா்.
புலி நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தேயிலைத் தோட்டத்தில் உலவும் புலிகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்றும், தோட்டத் தொழிலாளா்களின் பாதுகாப்பை வனத் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









