தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

நஞ்சநாடு பகுதியில் தேயிலைத்தாட்டத்தில் அமா்ந்திருந்த சிறுத்தை.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:40 pm

உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தொழிலாளா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நகருக்குள் உலா வருவது அண்மைக் காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் உதகையை அடுத்த நஞ்சநாடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று வியாழக்கிழமை பகல் நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. பின்னா் அந்த வழியாக வாகனங்கள் வருவதை பாா்த்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதன் காரணமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.