அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கூடலூா் அருகே ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

முத்தங்கா சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

Updated On :7 மே 2026, 4:52 am IST

நீலகிரி மாவட்டம், கூடலூரை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனைச் சாவடியில் கலால் துறை அலுவலா்கள் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது அந்த காரில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த அா்ஷத் (44), இஸ்மாயில் (40) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.