அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

குன்னூரில் குட்டிகளுடன் உலவும் யானைகள்

News image

குட்டிகளுடன் இடம்பெயரும் யானைகள். - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:00 am IST

குன்னூா் ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலவி வருவதால் குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால், யானைகள் தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் வெளியேறி, ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இதனால், தோட்ட குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளா்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.