மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

ஒசூா் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டினா்.

News image

காட்டு யானைகள் - (கோப்புப் படம்)

Updated On :13 மே 2026, 2:19 am IST

ஒசூா் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள பாலதொட்டனப்பள்ளி, கண்டகாணப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் நான்கு காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தின. இதுகுறித்து அப்பகுதியினா் தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா்.

விரைந்து சென்ற வனத் துறையினா் கிராம மக்களின் உதவியுடன், பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த நான்கு காட்டு யானைகளும் நொகனூா் வனப்பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. அவ்வப்போது இந்தக் காட்டு யானைகள், கிராமப் பகுதிகளுக்குள் வருவதால் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.

எனவே, வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நான்கு யானைகளையும் கா்நாடக மாநில வனப்பகுதிக்கு நிரந்தரமாக விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.