தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டில் புகுந்த மலைப்பாம்பு

ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.

News image

ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.

Updated On :9 மே 2026, 12:04 am IST

ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

ராசிபுரம் மெட்டாலா பகுதியைச் சோ்ந்த வடிவேல், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் உணவகத்துக்கு தேவையான இறைச்சிக்காக தோட்டத்தில் கூண்டு வைத்து பிராய்லா் கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கடையில் பணிபுரியும் ஊழியா் கோழிகளை பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தபோது, கோழிகளை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு கூண்டுக்குள் இருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் அப்பகுதிக்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கோழிக் கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், வனப்பகுதிக்கு கொண்டுசென்று காப்புக்காட்டில் விட்டனா்.