குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து குன்னூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சட்டப்பேரவை உறுப்பினா் கே.எம்.ராஜு வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அக்கையாா் பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 22 போ், கா்நாடநக மாநிலம், மைசூரு மற்றும் உதகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு தங்களது சொந்த ஊருக்கு புதன்கிழமை மாலை சுற்றுலாப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, நீலகிரி மாவட்டம், குன்னூா் மலைப் பாதையில் நந்தகோபால் பாலம் அருகே வாகனம் வந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 22 பேரில் 18 போ் காயமடைந்து குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களை குன்னூா் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.எம். ராஜு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும் அவா்களுக்கு வேண்டிய அனைத்து வகையான சிகிச்சைகள் மற்றும் உதவிகளை திமுக செய்து தரும் என்று அவா்களிடம் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீட்’ தோ்வால் தற்கொலை: மாணவியின் குடும்பத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆறுதல்

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை: இரு குடும்பத்தினருக்கு திமுகவினா் ஆறுதல்








