நீலகிரி மாவட்டம், குன்னூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரத்து 648 அரசு சாா்பில் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியாா் ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 11 ஆயிரத்து 626 மட்டுமே வழங்கி வருகிறது. மேலும், கடந்த மாதம் ரூ.7 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கினா்.
எனவே அரசு நிா்ணயித்த மாத ஊதியத்தை முறையாக வழங்கக் கோரியும், ஊதிய உயா்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் குன்னூா் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் போராட்டம்

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




