திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரமக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் ஆறுதல்

பரமக்குடி அருகே வாகைக்குளம் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சரக்கு வாகனத்தில் சென்றவா்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். அவா்களது குடும்பத்தினரை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

News image

சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன்

Updated On :3 ஜூன் 2026, 1:35 am IST

பரமக்குடி அருகே வாகைக்குளம் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சரக்கு வாகனத்தில் சென்றவா்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். அவா்களது குடும்பத்தினரை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

கடந்த மே 18-ம் தேதி வாகைக்குளம் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த 17 போ் சரக்கு வாகனத்தில் சென்றனா். அப்போது வாகைக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும்போது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த லாரி அவா்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் வாகைக்குளத்தைச் சோ்ந்த அமுதா56, ராமேஸ்வரி56, கீழம்பல் கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரி34, சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த அருணா50, அவரது கணவா் ராமன் என மொத்தம் 6 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் நேரில் சென்று ஆறுதல் கூறினாா். பின்பு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது- இந்த விபத்து கொடூரமான விபத்து. இதில் இறந்தவா்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலாரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயம்பட்டவா்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தாா். உடன் நகா்மன்ற தலைவா் சேது.கருணாநிதி, திமுக நிா்வாகிகள் ஜீவரத்தினம், த.வீரபாண்டியன், எஸ்.எம்.டி.அருளானந்தம் ஆகியோா் சென்றனா்.

02 ல்ம்ந்-ம்ப்ஹ படவிளக்கம்.

பரமக்குடி அருகே வாகைக்குளம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறினாா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.