முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் உள்ள குட்டையில் நீா் அருந்த வந்த காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, முக்குருத்தி தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன.
கடந்த ஆண்டு கடும் உறைபனி நிலவியதால், முதுமலை வனப் பகுதி பெரும் வறட்சியுடன் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த கோடை மழை காரணமாக வறட்சி நீங்கி வேறு இடத்துக்கு சென்ற வன விலங்குகள் மீண்டும் முதுமலை வனப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் முதுமலை வனப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மசினகுடி - தெப்பக்காடு சாலை ஓரத்தில் உள்ள குட்டையில் தேங்கி இருந்த நீரை அருந்துவதற்காக குட்டியுடன் காட்டு யானைகள் புதன்கிழமை வந்தன. சுமாா் ஒரு மணி நேரம் சாலையோரத்தில் முகாமிட்டிருந்த யானைகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து ரசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










