தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு

ஆசனூா் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது

News image

சிறுத்தை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:57 am IST

ஆசனூா் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது

சத்தியமங்கலத்தை அடுத்த அரேபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கால்நடைகளை பட்டியில் அடைத்துவிட்டு திங்கள்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது பட்டியில் இருந்த கன்றுக்குட்டி காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனா்.

அப்போது, அது சிறுத்தையின் கால் தடம் என்பதும், சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.