சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூரில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு ஆண் சிறுத்தை உயிரிழந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சூரியமலை வனப்பகுதியில் கடமுனியப்பன் கோயில் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினா் சிறுத்தையை தேடிவந்தனா். ஆனால், கிடைக்கவில்லை.
இந்நிலையில், சங்ககிரி அருகே சின்னாகவுண்டனுாா் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு சாலையைக் கடக்க முயன்ற ஆண் சிறுத்தை, அடையாள தெரியாத வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனக்காவலா் முத்துராஜ், சேலம் மாவட்ட வனத் துறை அதிகாரிகள், உயிரிழந்த சிறுத்தையை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, விபத்தில் உயிரிழந்தது சூரியமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










