தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசிய கடற்கரை கையுந்து பந்து போட்டி: குமுதா பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்

News image

தேசிய கடற்கரை கையுந்து பந்து போட்டியில் தங்கம் வென்ற குமுதா பள்ளி மாணவி ரிதன்யாவை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி உள்ளிட்டோா்.

Updated On :3 மே 2026, 6:46 am IST

தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில் 69-ஆவது எஸ்ஜிஎஃப்ஐ தேசிய அளவிலான 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், நம்பியூா் குமுதா பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா தமிழ்நாடு அணிக்காக பங்கேற்று, மேற்குவங்க அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா்.

வெற்றிபெற்ற மாணவி ரிதன்யாவை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கேசவகுமாா், ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமன் ஆகியோா் பாராட்டினா். மேலும், குமுதா பள்ளியின் தாளாளா் ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோரும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.