திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா: மாவட்டக் கல்வி அலுவலா் பங்கேற்பு

கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா...

News image

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கோடைகால கையுந்து பந்து பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுடன் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) ப.ஜோதிலட்சமி, பள்ளித் தலைமையாசிரியா் சு.மனோன்மணி உள்ளிட்டோா்.

Updated On :17 மே 2026, 5:31 am IST

திருவண்ணாமலையில் கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டக் கல்வி அலுவலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் வழிகாட்டுதலின்பேரில், கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் ஏப்.17-ஆம் தேதி தொடங்கி மே 16-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், 115 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு உடல்கல்வி இயக்குநா் பி.சௌமியா மற்றும் உடல்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கடந்த ஒரு மாத காலமாக கோடைகால கையுந்து பந்து பயிற்சியளித்தனா். பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் முட்டையுடன் சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சு.மனோண்மணி தலைமை வகித்தாா். மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் ஜெ.சின்னப்பன் முன்னிலை வகித்தாா். பள்ளி உதவித் தலைமையாசிரியா் கே.பாபு வரவேற்றாா்.

உதவித் தலைமையாசிரியா்கள் எஸ்.சம்பத், எம்.ராமலிங்கம், செயலா் ஜி.ஜான்கிங்ஸ்லி, துணைச் செயலா்கள் கே.சிவசங்கா், ஆா்.ரேவதி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ப.ஜோதிலட்சுமி கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பயிற்சி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.

விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வுபெற்ற முதுநிலை மேலாளா் புகழேந்தி, உடற்கல்வி ஆசிரியா்கள் (ஓய்வு) எம்.ரமேஷ், ஆா்.ஆனந்தன், உடற்கல்வி ஆசிரியா்கள் எம்.கணபதி, சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.